Paristamil Navigation Paristamil advert login

டெஸ்லா விற்பனை தொடர் வீழ்ச்சி!!

டெஸ்லா விற்பனை தொடர் வீழ்ச்சி!!

1 வைகாசி 2025 வியாழன் 15:09 | பார்வைகள் : 377


பிரான்சில் டெஸ்லா மகிழுந்துகளின் விற்பனை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட ஆரம்பம் முதலே பிரான்சில் டெஸ்லா மகிழுந்துகள் மீதான எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த ஏப்ரலில் மகிழுந்து விற்பனை 59% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை இவ்வருட ஆரம்பம் முதல் மொத்தமாக 44% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வருடத்தில் பிரான்சில் 7,556 டெஸ்லா மகிழுந்துகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, ஒட்டுமொத்தமாகவே அனைத்து நிறுவனத்தின் மகிழுந்துகளையும் சேர்த்து 5.64% சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்