Paristamil Navigation Paristamil advert login

அவதானம் : இனிமேல் மின்சார வாகனங்களுக்கும் பதிவு கட்டணம்!

அவதானம் : இனிமேல் மின்சார வாகனங்களுக்கும் பதிவு கட்டணம்!

1 வைகாசி 2025 வியாழன் 07:21 | பார்வைகள் : 635


மின்சார வாகனங்களை பதிவு செய்வதற்கு இன்று வியாழக்கிழமை முதல் (மே 1) கட்டணம் (Carte grise) அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மின்சாரத்தில் இயங்கும் வாகங்களின் விற்பனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் பதிவுக்கட்டணம் இலவசமாக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று முதல் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வ்ஒரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு வித கட்டணம் அறவிக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்ஸ் மாகாணத்துக்கு 54.95 யூரோக்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
(புகைப்படத்தில் காண்க.) 

அதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான பதிவுகளுக்கான கட்டணம் இவ்வருடத்தில் கிட்டத்தட்ட 60% சதவீதம் வரை பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்திருந்தது. குறிப்பாக Corse தீவுக்கான பதிவுக்கட்டணம் 27 யூரோக்களில் இருந்து 43 யூரோக்களாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்