■ ஜெருசலத்தில் தீ : களமிறங்கும் பிரான்ஸ்!!

1 வைகாசி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 872
ஜெருசலத்தில் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில், பிரான்ஸ் உதவிக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ பரவி, காடுகள் விளாசி எரிந்து வருகிறது. புதன்கிழமை மாலையில் இருந்து இஸ்ரேலின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுத்தீயிணை அணைக்க தேவையான உபகரணங்களை பிரான்ஸ் வழங்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று மே 1, வியாழக்கிழமை பல்வேறு நவீன கருவிகள் அங்கு கொண்டுசெல்லப்பட உள்ளன.
ஜெருசலத்தின் மேற்கில் காட்டுத்தீயினால் ஐந்து நகரங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.