மக்களின் மதிப்பிழந்த முதற் பிரதமர் பய்ரூ!!

30 சித்திரை 2025 புதன் 21:26 | பார்வைகள் : 1468
மே முதலாம் திகதி வருவதற்குள் மக்களின் நம்பிக்கையை இழந்த ஐந்தாம் குடியரசின் முதல் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ ஆவார்.
இவரது பிரபலம், நன்மதிப்பு, நம்பிக்கை என்பன குறைந்து குறைந்து வெறும் 14 சதவீத மக்கள் மட்டுமே பிரதமரின் செயற்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதுவரை எந்தப் பிரதமரும் இந்த அளவிற்குக் கீழான நம்பிக்கை வீதத்தினைப் பெற்றதில்லை.
2024 ஆம் ஆண்டு ஆகக்குறைந்த நம்பிக்கை வீதமாக 16 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார் இவரிற்கு முதல் இருந்த பிரதமர் ஜோன்-மார்க் ஐரோல் (Jean-Marc Ayrault).
அவரை விட இன்னும் கீழான 14 சதவீத நம்பிக்கை வீதத்தை மட்டுமே பெற்று மக்களால் வெறுக்கப்படும் பிரதமராக பிரோன்சுவா பய்ரூ உள்ளார்.