நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்- டொனால்ட் டிரம்ப்
30 சித்திரை 2025 புதன் 14:12 | பார்வைகள் : 8880
நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன் அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார் உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர்.
இதற்காக வாடிகன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 7 ஆம் திகதி கூடி தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள். ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப்,
"நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன் அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
மேலும் நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan