அஜித் மருத்துவமனையில் அனுமதி.!

30 சித்திரை 2025 புதன் 16:03 | பார்வைகள் : 166
நடிகர் அஜித் திடீரென சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், சமீபத்தில் தனது குடும்பத்துடன் டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் கையால் பத்மபூஷன் விருதை வாங்கினார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது என்பது தெரிந்தது.
அதன் பின்னர், அஜித் குடும்பத்துடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அஜித், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளருக்கு நன்றி என்றும், ‘விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று திடீரென அஜித்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள தகவல் படி, ‘அஜித்துக்கு வழக்கமான பரிசோதனை நடைபெற்று வருகிறது’ என்றும், ‘அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை’ என்றும் கூறப்படுகிறது.