Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வசிப்பிட வரி திட்டம் - கிளம்பும் எதிர்ப்பலைகள்!!

மீண்டும் வசிப்பிட வரி திட்டம் - கிளம்பும் எதிர்ப்பலைகள்!!

30 சித்திரை 2025 புதன் 12:34 | பார்வைகள் : 451


மீண்டும் வசிப்பிட வரியான taxe d'habitation இனை மீளக் கொணர்வது அல்லது புதிய வரி ஒன்றைக் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக பொதுமக்கள் நிதியத்தின் அமைச்சர் அமெலி-து மொன்சலன் (Amélie de Montchalin) தெரிவித்திருந்தார்.

உக்ரைன் நோக்கித் தேவையற்ற செலவீனத்ததைச் செய்து விட்டு மக்கள் தலையில் அனைத்தையும் சுமத்தும் இந்தத் திட்டம் மிகப் பலமாக எதிர்க்கப்பட்டுள்ளது.

இவர்களிற்கு என்ன தலையில் அடிபட்டு விட்டதா? மக்களை இவர்கள் நினைக்க மாட்டார்களா? மக்களிடம் இவர்கள் பேச மாட்டார்களா? மக்கள் வரிகளால் பெரும் சிக்கல்களைச் சந்திக்கின்றார்கள் என Hauts-de-France  இன் தலைவர் சவியே பேத்ரோன் (Xavier Bertrand)தெரிவித்துள்ளார்.

பல அரசியற் தலைவர்கள் நாட்டில் கடும் எதிர்ப்பு உருவாகும் என எமானுவல் மக்ரோனை எச்சரித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்