Paristamil Navigation Paristamil advert login

சிறைகள் மீதான தாக்குதலில் மூன்று பதினமவயதினர் கைது!!

சிறைகள் மீதான தாக்குதலில் மூன்று பதினமவயதினர் கைது!!

30 சித்திரை 2025 புதன் 12:01 | பார்வைகள் : 256


சிறைகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டோர் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை மட்டும் 25 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று மேலும் மூவர் வைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சுக் கைதிகளிAன் உரிமைகள் DDPF (Droit des prisonniers français) எனும் அமைப்பின் கீழேயே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  

இந்தத் தாக்குதல் குற்றவாளிகள் மூவர் இன்று கைது இசய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் 18 வயதிற்குக் குறைந்த பதின்ம வயதினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் தீவிர இடதுசாரிகளின் தலையீடோ அல்லது, வெளிநாட்டு தலையீடோ அல்ல. இது ஒரு பொதுவான தற்செயல் நிகழ்வின் விளைவும் அல்ல எனவும் இவற்றை ஒருங்கிணைத்தது போதைப்பொருள் கடத்தலும் விநியோகமுமே தான் என விசாரணைப்பிரினர் தெரிவித்துள்ளனர்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்