கான் திரைப்பட விழா நடுவர் குழு அறிவிப்பு!

29 சித்திரை 2025 செவ்வாய் 18:50 | பார்வைகள் : 596
விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள பிரபல கான் சர்வதேச திரைப்பட விழாவிற்கான நடுவர் குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நடிகை மற்றும் நடிகரான Halle Berry, Jeremy Strong, இத்தாலிய நடிகை Alba Rohrwacher, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கதாசிரியர்களான தென் கொரியாவின் Hong Sangsoo, இந்தியாவின் Payal Kapadia மற்றும் மெக்சிக்கோவின் Carlos Reygadas, பிராங்கோ-மொரோக்கன் எழுத்தாளரான Leïla Slimani, ஆவணப் படத் தயாரிப்பாளான கொங்கோவினைச் சேர்ந்த Dieudo Hamadi ஆகியோருடன் இந்த நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து பெண்களும் நான்கு ஆண்களும் கொண்ட இந்த நடுவர் குழுவின் தலைவராக, பிரான்சின் நடிகை Juliette Binoche தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடத்தின் கான் திரைப்பட விழாவானது மே மாதம் 13ம் திகதி முதல் 24ம திகதி வரை நடைபெற உள்ளது.