புதிய போதைப்பொருள் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் வெற்றி!!

29 சித்திரை 2025 செவ்வாய் 18:24 | பார்வைகள் : 615
பிரான்சில் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்க புதிய சக்தி வாய்ந்த போதைப்பொருள் கடத்தல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதற்கான புதிய சிறப்பு நீதித்துறையும், அதன் படையணியும் உருவாக்கப்படுவதை உள்ளடக்கிய இந்தச் சட்டம், நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் மற்றும் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையூ ஆகியோரால் பிரேரிக்கப்பட்டது.
பாரளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் இணைந்த கலப்பு சபையில், இந்தச் சட்டம் 396 ஆதரவு வாக்குகளையும் 68 எதிர் வாக்குகளையும் பெற்று சட்டமாக்கப்பட்டது. இது போதைப்பொருளின் பிடியிலிருந்து பிரான்சை முற்றாக விடுவிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப் பொருள் எதிர்ப்புச் சட்டத்திற்கு, நாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான இந்தச் சட்டத்திற்கு, எதிராக ஜோன்-லுக் மெலோன்சோனின் டுய குசயnஉந iளெழரஅளைந கட்சி மட்டும் எதிர்த்து வாக்களித்துள்ளது.
போதைப்பொருள் சந்தையை இல்லாதொழிக்கும் சிறப்பு நீதிமன்றமும், அதற்கான சிறப்புப் படையணியும் 2026 ஆம் ஆண்டில் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.