Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவிற்கான முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பிரான்ஸ் அச்சம்!

அமெரிக்காவிற்கான முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பிரான்ஸ் அச்சம்!

25 வைகாசி 2025 ஞாயிறு 14:43 | பார்வைகள் : 340


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப், ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக மிரட்டியுள்ளார். 

இந்த முடிவால் பிரான்சின் முக்கிய ஏற்றுமதி துறைகள் அதாவது வானூர்தி, வையின், தேங்காய் சார்ந்த உணவுப்பொருட்கள், அழகு சாதனங்கள் போன்றவற்றின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பிரான்ஸ் பிரதி அமைச்சர் லாரன்ட் செயிண்ட்-மார்டின் (Laurent Saint-Martin)  கூறியுள்ளார். 

இது எக்காரணத்தாலும் வேண்டத்தகாத முடிவு என்றும் ஒட்டுமொத்தமாக ஒரு பேரழிவாக இருக்கும் ஆனால் முதலில்  அமெரிக்க பொருளாதாரத்திக்கே இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மே 24, சனிக்கிழமை அன்று அவர் தெரிவித்துள்ளார்.

2024ல், பிரான்ஸ் அமெரிக்காவுக்கு அதிக அளவில் வானூர்தி உபகரணங்கள், மதுபானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா ஏற்கனவே ஐரோப்பிய பொருட்கள் மீது பலமுறை இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25%, பின்னர் கார்கள் மீது 25% மற்றும் ஏனைய ஐரோப்பிய பொருட்களுக்கு 20% வரி ஏப்ரலில் விதிக்கப்பட்டது. இது ஜூலை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையைத் தொடங்கும் நிலையில் இருப்பினும் 10% வரி ஐரோப்பிய பொருட்களுக்கு அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்