மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் சிம்பு?

25 வைகாசி 2025 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 1212
தமிழில் ‛தனி ஒருவன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் மோகன் ராஜா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு 8 வருடங்கள் கடந்த நிலையில் மோகன் ராஜா இன்னும் அடுத்து தமிழில் படத்தை இயக்கவில்லை.
இதற்கிடையில் 'தனி ஒருவன் 2' உருவாகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதில் ஏற்படும் ஒரு சில காரணங்களால் மோகன் ராஜா சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதற்கான தயாரிப்பாளர் தேடும் பணியில் சிம்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3