Paristamil Navigation Paristamil advert login

சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்

சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்

25 வைகாசி 2025 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 1240


அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இ.பி.எஸ்., அளித்த பேட்டி: மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பங்கேற்றது ஏன்? பிரதமர் மோடி தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? மக்கள் பிரச்னைகளுக்கு செல்லாமல் இப்போது ஏன் சென்றார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார். மக்கள் நலனின் அக்கறை இருந்திருந்தால் மூன்று ஆண்டுகள் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பார். தமிழகத்தில் பல்வேறு துறையில் ஊழல் நடக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்க விட்டார்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டிய தி.மு.க., இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறது? தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த பாலியல் புகாரில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த புகார் என்ன ஆனது? இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்