Paristamil Navigation Paristamil advert login

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக சுப்மன் கில் தேர்வு - 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக சுப்மன் கில் தேர்வு - 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

24 வைகாசி 2025 சனி 14:55 | பார்வைகள் : 120


வரும் ஜூன் ஜூலை மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் அணித்தலைவர் யார் என்ற கேள்வி நிலவியது.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதில், சுப்மன் கில் அணித்தலைவராகவும், ரிஷப் பந்த் துணை அணித்தலைவராகவும், விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அணியில், சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஷ்வி ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, த்ருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரதுல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
 
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்