Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பு - 475 பேர் அதிரடியாக கைது

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பு -  475 பேர் அதிரடியாக கைது

24 வைகாசி 2025 சனி 13:46 | பார்வைகள் : 386


இலங்கை முழுவதும் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும், மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்