Paristamil Navigation Paristamil advert login

சட்டவிரோத திருமணம் பாராளுமன்றத்தில் முன்மொழிவு!

சட்டவிரோத திருமணம் பாராளுமன்றத்தில் முன்மொழிவு!

24 வைகாசி 2025 சனி 10:03 | பார்வைகள் : 3346


UDR கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் மிசூ (Éric Michoux), சட்டவிரோத நிலை கொண்டவர்களுடன் நடைபெறும் திருமணங்களை தடை செய்யும் புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

இவர், இந்தத் திருமணங்களில் 'உண்மையான அன்பு மற்றும் ஒப்புதல்' இருக்குமா என்பது சந்தேகமானது எனத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், சட்டவிரோத நிலையில் உள்ள ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சிக்கும்போது 'ஒப்புதல் இல்லையென நிர்ணயிக்கும் முன்பணி' உருவாக்கவேண்டும் என முன்மொழிந்துள்ளார். இதனால் இந்தத் திருமணம் சட்டபூர்வமாக நடக்க முடியாது.

பல நகரபிதாக்களும், இவ்வாறான திருமணங்களை நடத்த மறுக்கிறார்கள்.

சமீபத்தில், மார்லேன் மூரியே என்ற நகரபிதா ஒரு பிரெஞ்சு பெண்ணும், துனிசியர் ஒருவரும் திருமணம் செய்யும்போது அதனை நடாத்தி வைக்க மறுத்தது வாசகர்கள் அறிந்ததே!

இதேபோன்று, ராபர்ட் மேனார் (Béziers), நிக்கோலா தராகொன் (Valence) மற்றும் ஸ்தெபான் வில்மோ (Hautmont) ஆகியோரும் இதே நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த சட்ட முன்மொழிவு ஜூன் 26 அன்று ருனுசு கட்சி நாடாளுமன்ற இடைவெளி நேரத்தில், ஒரு ஒப்பந்தமாக முன்வைக்கப்பட உள்ளது.

CSA-CNEWS  நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், 73சதவீத பிரெஞ்சு மக்கள் சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டவருடனான திருமணத்தை தடை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்