ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த மேற்கிந்திய தீவு வீரர்

24 வைகாசி 2025 சனி 08:42 | பார்வைகள் : 358
அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடர், அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக கீசி கார்டி 102 ஓட்டங்களும், மேத்யூ போர்டு 58 ஓட்டங்களும் குவித்தனர்.
அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தொடங்கும் முன்னர் குறுக்கிட்ட மழை, நீண்ட நேரம் தொடர்ந்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த போட்டியில், மேத்யூ போர்டு 16 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், உலகின் அதிவேக அரைசதம் அடித்த ஏபி டி வில்லியர்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தென்னாபிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 16 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.
ஜெயசூர்யா, குசால் மெண்டிஸ், கப்தில், லிவிங்ஸ்டன் ஆகியோர் 17 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.