கிம் கார்தாஷியனின் கொள்ளை வழக்கு- முடிவிற்கு வந்த பெரும் கதை!

23 வைகாசி 2025 வெள்ளி 23:22 | பார்வைகள் : 1623
இந்த வழக்கில் முக்கியமான தருணமாக, இன்று செவ்வாயக் கிழமை மே 13 ஆம் தேதி, கிம் கார்டாஷியன் (KIM KARDASHIAN) பரிஸின் நீதிமன்றத்தில் நேரில் வந்திருந்தார்.
2016 ஒக்டோபரில் பாரிஸில் நடந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு, நான்கு வாரங்களாக நடைபெற்ற வழக்கின் முடிவில், 10 பேரில் 7 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
9 வருடங்களாக நீடித்த பெரும் தொடர் கதையின் முடிவாக இந்த வழக்கு இன்று முடிவடைந்துள்ளது. 2016 ஒக்டோபர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளின் இரவில் நடைபெற்ற கிம் கார்டாஷியனின் பரிஸ் கொள்ளை சம்பவத்தின் வழக்கு, 2025 மே 23 ஆம் தேதி பரிஸ் நீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளது.
நான்கு வாரங்களாக நடைபெற்ற விசாரணைகளுக்குப் பிறகு, சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது.
2016 ஆம் ஆண்டு, பாரிசில் ஒரு ஐந்து நட்சத்திர தஙககத்தின் அறையில் கிம் கார்டாஷியன் மீது நடைபெற்ற நகைக்கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு 9 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்தது.
13 மே அன்று பாரிஸ் நீதிமன்றத்தில் கிம் நேரில் வந்து தாக்கப்பட்ட நிகழ்வை விவரித்தார். கொல்லப்படுவேன், «பாலியல் வன்முறை நடக்கும் என பயந்தேன். அவர்கள் என்னை கட்டினார்கள். துப்பாக்கி மிரட்டலில் இறந்துவிடுவேன் என எண்ணினேன். எனது குழந்தைகள் நினைவில் வந்தனர். நான் இருந்தே ஆக வேண்டும் என வேண்டிக்கொண்டேன்» என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
குற்வாளிகளின் மன உணர்வுகள்
யூனிஸ் அப்பாஸ்: மன்னிக்கவும், இது என் பொறுப்பு.
ஓமார்: மன்னிப்புக் கேட்டார், உருக்கமாக பேச முடியவில்லை.
சிலர் கிம் மற்றும் ஹோட்டல் ஊழியரிடம் உணர்வோடு மன்னிப்பு கேட்டனர்.
«இந்த மன்னிப்புகளை ஏற்று நான் மன்னிப்பேன், ஆனால் மறக்க மாட்டேன்» எனவும் கிம் உணர்ச்சி வசப்பட்டுத் தெரிவித்திருந்தார்.
அவரது பிரெஞ்சு வழக்கறிஞர்கள் மூலம் கிம்மிற்கு தீர்ப்பில் பெரும் திருப்தி எனத் தெரிவிக்கப்பட்டது.