Paristamil Navigation Paristamil advert login

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான்

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான்

24 வைகாசி 2025 சனி 11:26 | பார்வைகள் : 408


அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்'' என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தி.மு.க.,வுக்கு எது எதிர்க்கட்சி. அ.தி.மு.க., எதிர்க்கட்சியா? தி.மு.க., ஒரு கொள்கை வைத்து இருக்கிறது. ஊழல், லஞ்சம், கொள்ளை, மணல் கொள்ளை நடக்கிறது. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது? கொடிகள் வேறு வேறு ஆக இருக்கிறது. கொள்கையில் வேறுபாடு இருக்கிறதா?

நிடி ஆயோக் கூட்டம்

இவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். அவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள். இவர்களும் இலவசம் அறிவிப்பார்கள். அவர்களும் இலவசம் அறிவிப்பார்கள். 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் இப்போது செல்வது ஏன்?


ரெய்டு வந்தால்..!

அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள். இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த நாட்டை நிர்வாகம் செய்வது, சட்டசபை, பார்லிமென்டா? அல்லது நீதிமன்றமா ? என்ற கேள்வி எழுகிறது. எல்லா முடிவுகளையும் நீதிமன்றம் எடுத்தால், சட்டசபை, பார்லிமென்ட் தேவையில்லை. அதனை கலைத்து விடலாம். இவ்வாறு சீமான் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்