Paristamil Navigation Paristamil advert login

வாடகை மகிழுந்துகள் போராட்டம் - பிரதமரும் அமைச்சர்களும் சந்திப்பு!!

வாடகை மகிழுந்துகள் போராட்டம் - பிரதமரும் அமைச்சர்களும் சந்திப்பு!!

23 வைகாசி 2025 வெள்ளி 02:00 | பார்வைகள் : 601


இந்தப் போராட்டங்கள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் சனிக்கிழமை, போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமர் பிரான்சுவா பய்ரூ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஏன் வாடகை மகிழுந்துகள் (Taxi) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்?

புதிய சுகாதார போக்குவரத்து கட்டணம் தொடர்பாக சுகாதாரக் காப்பீட்டு அமைப்பு (Assurance Maladie) செயல்படுத்த விருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வீதிமறிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த கட்டண மாற்றம், மருத்துவ பயண வாடகை மகிழுந்துகளின் (transports sanitaires) மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

'இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் என் நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு வரும்' என அங்கலீன் எனப்படும் வாடகை மகிழுந்து நிறுவன தொழிலதிபர் கவலை கொண்டுள்ளார். 
இது பெரும்பாலோரின் கவலையாக உள்ளது.

முக்கிய நகரங்களில் வலுக்கும் இந்தப் போராட்டம்

பரிஸ் சார்ல்-து-கோல் விமான நிலையம் முன்பாகவும் மற்றும் பெருநகரங்களான போ, மார்செய், பரிஸ் போன்ற நகரங்களிலும் தொடர்ச்சியாக மூன்றாவது, நான்காவது நாட்களாகத் நடந்து வருகின்றது.

பிரதமர் அலுவலகம் மற்றும் போக்குவரத்து அமைச்சரகத்திற்கு அருகிலும் மறிப்புகள் வைத்து மகிழுந்துகள் பெருமளவில் கூடிப் போராட்டம் நடக்கின்றது.

போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot) வழங்கிய சலுகைகள் வாடகை மகிழுந்து ஓட்டுநர்களுக்கு போதாது எனக் கூறப்படுகிறது.

4 ஓட்டுநர்கள் காவற்துறையினரின்  வன்முறைகளால் தாக்கப்பட்டதாகவும் துப்பாக்கி, மின்சாரத் தாக்குதல் துப்பாக்கி, கண்ணீர் புகைக் குண்டுகள் போன்றவை தங்கள் மீது பிரயோகிக்கப்பட்டதாக வாடகை மகிழுந்து சாரதிகள் பகிரங்கமாகக் காவற்துறையினரின் வன்முறைகளைக் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் வாழ்வு பொருளாதார வீழ்ச்சியைச் சந்திப்பதுடன் இப்படியான ஆபத்துகளையும் எதிர்நோக்க வேண்டி உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இணக்கப்பாட்டிற்கான முக்கியப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

வாடகை மகிழுந்து தொழிலாளர்களின் வாழ்க்கை முறையே ஆபத்தில் ஆபத்தில் உள்ளது எனஅவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய கட்டண திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்கள் வருமானத்தில் பாதி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை பேச்சுவார்தை ஒரு இணக்கப்பாட்டிற்கு வராவிட்டால், இன்னமும் வேகமாகத் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் வாடகை மகிழுந்து சாரதிகள் எச்சரித்துள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்