டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை
23 வைகாசி 2025 வெள்ளி 05:43 | பார்வைகள் : 3230
சட்டவிரோத பார்கள், கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்தும் கிடைக்கும் பணம் தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவிற்கு சென்றடைகிறது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது பதிவு:டாஸ்மாக் என்பது தமிழக அரசு நடத்தும் நிறுவனம். இது தமிழக மக்களை போதையில் இருப்பதையும், தங்கள் செலவில் தி.மு.க., லாபத்தை ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டு உள்ளது. ஏராளமான சட்டவிரோத பார்கள் மூலமும் கணக்கில் வராத பில்கள் மூலம் ஒவ்வொரு கடையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வருகிறது. தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் பல ஆயிரம் கோடி சேர்கிறது.
டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு அதிகாரிகளின் கொடுமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புகிறார். ஏழைகளை கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு, மக்களின் அரசாக செயல்படுவதற்கு முன்னர், ஸ்டாலின் அரசு இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கும். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan