இந்திய U19 கிரிக்கெட் அணித்தலைவராக CSK வீரர் நியமனம்

22 வைகாசி 2025 வியாழன் 16:28 | பார்வைகள் : 1922
இந்திய U19 கிரிக்கெட் அணி, வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒரு நாள் மற்றும் 2 நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஜூன் 27, 30, ஜூலை 2, 5, 7 திகதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. ஜூலை 12-15 முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியும், ஜூலை 20-23 2வது 4 நாள் டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் CSK அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தி வரும், ஆயுஷ் மாத்ரே அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், RR அணியில் இடம் பெற்று அசத்தி வரும், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஆயுஷ் மத்ரே (அணித்தலைவர்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை அணித்தலைவர்), ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுஹான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங் ஆகியோர் U19 அணியில் இடம் பிடித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1