அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் !

22 வைகாசி 2025 வியாழன் 15:42 | பார்வைகள் : 1680
முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அப்துல் கலாம் கேரக்டரில் தமிழ் மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் தற்போது அதிக படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பவர் தனுஷ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், 'குபேரா', 'இட்லி கடை', ’Tere Ishk Mein’ , இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், விக்னேஷ் ராஜா இயக்கும் படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தை ’ஆதி புரூஸ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க உள்ளதாகவும், அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
'அப்துல் கலாம்: மிஸைல் மேன் ஆஃப் இந்தியா' என்ற தலைப்பில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், தனுஷ் தற்போது உள்ள சில முக்கியமான கமிட்மெண்டுகளை முடித்தவுடன் இந்த படத்தில் இணைவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் நடித்த 'குபேரா', 'இட்லி கடை' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தடுத்து இந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1