Paristamil Navigation Paristamil advert login

அதிர்ச்சி - பேரங்காடி மலிவு விற்பனை அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்புள்ள உணவுகளிற்கே!

அதிர்ச்சி - பேரங்காடி மலிவு விற்பனை அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்புள்ள உணவுகளிற்கே!

22 வைகாசி 2025 வியாழன் 00:05 | பார்வைகள் : 4136


Foodwatch France மற்றும் ஆறு பிற ஆரோக்கிய அமைப்புகள் சமீபத்தில் 5,000 மலிவு விற்பனை மீது ஆய்வு நடாத்தியதில், பல்பொருள் பேரங்காடிகளில் பெரும்பாலான மலிவு விலைக் கழிவுகள் (promotions) ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளுக்கே வழங்கப்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளனர்.

66 சதவீத மலிவு விற்பனை, அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ள உணவுகளுக்கே வழங்கப்படுகின்றன
மாறாக, வளர்ச்சிக்கான உணவுகள், பழங்கள், காய்கறிகள், பருப்புகள் மீதான மலிவு விற்பனை மிகவும் குறைவாக, வெறும் 12 சதவீதம் தான் வழங்கப்படுகின்றது.

Foodwatch France நிறுவனம் மற்றும் ஏழு நலத்துறை அமைப்புகள் இந்த நிலைமையை 'நுகர்வோரின் ஆரோக்கியத்தை கெடுத்;துவிடும் பல்பொருள் பேரங்காடிகளின்  போக்காக' விமர்சித்துள்ளன.

«Carrefour, Leclerc, Lidl  போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்கள் நலமான உணவுக்காக உறுதியளிப்பதாக கூறினாலும், நடைமுறை அதற்கு விரோதமாகவே இருக்கின்றது.

மலிவு விற்பனைக் கழிவுகள் பெரும்பாலும் அதிக அளவில் வாங்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது மிகை நுகர்வை ஊக்குவிக்கிறது.

40சதவீத மலிவுவிலைக் கழிவுகள் சுகாதார பரிந்துரைகள் படி குறைவாகவே உண்ண வேண்டிய உணவுகளுக்கே வழங்கவேண்டும்»

«நலமான உணவுகள் தேர்வு செய்ய வேண்டுமானால், அதற்கான விலை அதிகமாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கும் நியாயமான வருமானம் கிடைக்க வேண்டும். பல்பொருள் பேரங்காடிகள் குறைந்தது 50சதவீதமான மலிவு விற்பனைகள் நல்ல தரமுள்ள, ஆரோக்கியமான உணவுகள் மீது வழங்க வேண்டும்»

என மேற்கூறிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நுகர்வோர் மிக எச்சரிக்கையுடன் கொள்வனவு செய்தால் மட்டுமே உடல்நிலை கெடாமல் காத்துக் கொள்ள முடியும்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்