ஆபரேஷன் சிந்தூரின் போது பயங்கரவாதிகள் முயற்சி முறியடிப்பு: பி.எஸ்.எப்.,
22 வைகாசி 2025 வியாழன் 07:02 | பார்வைகள் : 3956
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீருக்குள் 50 பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பி.எஸ்.எப்., டிஐஜி எஸ்எஸ் மண்ட் கூறியதாவது: நமது தைரியமிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர். ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் எல்லையில் காத்திருப்பதாக உளவுத்துறை தகவல் வந்தது. கடந்த 8 ம் தேதி, இதனை கண்டறிந்து அவர்களை தடுக்க தயாராக இருந்தோம்.
எல்லையில் 40 - 50 பயங்கரவாதிகள் காத்திருந்தனர். அவர்கள் நமது எல்லையை நோக்கி வந்தனர். சூழ்நிலையை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான குண்டுகளை வீசினோம். இதற்கு எதிர்பார்த்தது போலவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்தோம். இதனையடுத்து பயங்கரவாதிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இது அனைத்தும் 1.5 மணி நேரத்தில் நடந்து முடிந்தது.
ஆண் வீரர்களுக்கு நிகராக பெண் வீரர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan