வாடகை மகிழுந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்.. வீதிகளில் நெருக்கடி!!

21 வைகாசி 2025 புதன் 11:53 | பார்வைகள் : 679
வாடகை மகிழுந்து சாரதிகள் (Taxi) இன்று மே 21, புதன்கிழமை மூன்றாவது நாளாக வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாரதிகள் பரிஸ் மற்றும் புறகரங்களில் வீதிகளை முற்றுகையிட்டு, மகிழுந்துகளை மெதுவாகச் செலுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் 12 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் பயணம் தற்போது 35 நிமிடங்கள் எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறத
Roissy நிலையத்தை நோக்கிச் செல்லும் A3 சாலை, Rungis நோக்கிச் செல்லும் A106 சாலை, பரிசை நோக்கி வரும் A86, A6A, A13 மற்றும் A6B சாலைகள் போன்ற்றவற்றில் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.
Bois d'Arcy - Vaucresson நகரங்களை இணைக்கும் A12 நெடுஞ்சாலையிலும் நெரிசல் பதிவாகியுள்ளது. அத்தோடு போக்குவரத்து அமைச்சகத்துக்கு அருகே Boulevard Raspail பகுதியிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.
வாடகை மகிழுந்து சாரதிகள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.