நேஷனல் ஹெரால்டு மோசடி; ரூ.142 கோடி பயன் அடைந்த சோனியா, ராகுல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

21 வைகாசி 2025 புதன் 10:08 | பார்வைகள் : 2234
நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய 142 கோடி ரூபாய் பணத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பயன் அடைந்துள்ளதாக, டில்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது. யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
2021ல் பாய்ந்தது வழக்கு
இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர். ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. மோசடியில் தொடர்புடைய, 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியும் வைத்துள்ளது.
குற்றப்பத்திரிகை
இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் டில்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
142 கோடி ரூபாய்
அப்போது, ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய 142 கோடி ரூபாய் பணத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் பயன் அடைந்துள்ளனர். அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கும் வரை அவர்கள் பயன் பெற்றுள்ளனர். அவர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்தது மட்டுமின்றி, தற்போது வரை அதை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சிக்கலில் ராகுல், சோனியா!
இதனை டில்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி தெரிவித்தார். அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டு ராகுலுக்கும், சோனியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1