Paristamil Navigation Paristamil advert login

15 வயதுக்கு குறைந்தவர்கள் முக்காடு அணிய தடை: கப்ரியல் அட்டாலின் அதிர்ச்சிகரமான முன்மொழிவுகள்!

15 வயதுக்கு குறைந்தவர்கள் முக்காடு அணிய தடை: கப்ரியல் அட்டாலின் அதிர்ச்சிகரமான முன்மொழிவுகள்!

20 வைகாசி 2025 செவ்வாய் 22:17 | பார்வைகள் : 820


முன்னாள் பிரதமர் கப்ரியல் அட்டால், இஸ்லாமிய அரசியல் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தனது Renaissance கட்சி, வரும் திங்கள் அன்று  நடத்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளார். 

அவர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பொதுவெளியில் முக்காடு  (voile) அணிவதை தடை செய்தல், பெற்றோர்ப பிள்ளைகளை கட்டாயப்படுத்தும் நிலையை குற்றமாக்கல் மற்றும் மதவழிப்பிரிவினைக்கு எதிரான புதிய சட்டம் கொண்டுவருதல் அடங்குகின்றன.

இந்த நடவடிக்கைகள், பிரான்சில் முஸ்லீம் சகோதரத் தொண்டு இயக்கத்தின் ஊடுருவல் குறித்த இரகசிய அறிக்கையுடன் நேரடியாக தொடர்புடையவை. அந்த அறிக்கையில் குடியரசை பாதிக்கும் வகையில் “மீள் இஸ்லாமிய மயமாக்கல்” நடைமுறைகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டங்களால், குடியரசின் சட்டங்களை மறுத்தல் அல்லது முரணான விதிகளை அமுல்படுத்த முயற்சிக்கும் செயல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், அபாயகரமான இத்தகைய முன்மொழிவுகளை, முன்னாள் பிரதமர் 2027 தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தில் முக்கிய விவகாரமாக முன்வைக்க உள்ளார்.  இவர் அபாயாவை பள்ளிகளில் தடை செய்த உத்தரவால் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்