Paristamil Navigation Paristamil advert login

நாடுகடத்தலை விரைவுபடுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம்!

நாடுகடத்தலை விரைவுபடுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம்!

20 வைகாசி 2025 செவ்வாய் 15:47 | பார்வைகள் : 3782


Bruxelles, தற்காலிக பாதுகாப்புக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களது பிறப்பிட நாடு அல்லாத, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் "பாதுகாப்பானது" எனக் கருதும் நாடுகளுக்கு அனுப்பும்  நடவடிக்கையை எளிமையாக்க விரும்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிக பாதுகாப்பு கோரியவர்களை "பாதுகாப்பான" மூன்றாம் நாடுகளுக்கு அனுப்புவதற்கான விதிகளை தளர்த்த முனைகிறது. இதனால், குடிவரவு கொள்கையை கடுமையாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கப்படுகிறது.

இதுவரை, அந்த நபருக்கும் அந்த நாட்டுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தற்போது அந்த நிபந்தனையை நீக்கலாம் என பரிந்துரை செய்கிறது. இது நாடு கடத்தும் நடவடிக்கைகளை விரைவாக்குவதற்கான வழியாகும்.

இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள், இது புகலிடம் கோருவோர் உரிமைகளுக்கு எதிரானது என்றும், இவை மூன்றாம் நாடுகளிடம் இருந்து அரசியல் மற்றும் நிதி சலுகைகள் வாங்கும் முயற்சியாக மாற்றப்படலாம் என்றும் எச்சரிக்கின்றன. 

ஆனால், ஐரோப்பிய ஒன்றியமானது நாடு கடத்தப்படும் நாடுகள் மனித உரிமைகளை மதிக்கின்றன என்பதை உறுதி செய்கின்றது. மேலும் இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வர, ஐரோப்பிய பாராளுமன்றமும், ஐரோப்பிய உறுப்புநாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்