மின்சார - நைட்ரஜன் வாகனங்களின் பிராந்திய வரி - 2025 நிதி சட்டத்தில் மாற்றம்
20 வைகாசி 2025 செவ்வாய் 00:12 | பார்வைகள் : 9282
மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் வாகனங்கள் அல்லது இந்த இரண்டின் இணைப்பில் இயங்கும் சுத்தமான (véhicules propres) வாகனங்கள் (வளி மாசடைவு ஏற்படாத வாகனங்கள்), இதுவரை பிராந்திய வரியிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டிருந்தன. இந்த வரி, உங்கள் வாகனப் பதிவுச் சான்றிதழ் (certificat d'immatriculation / carte grise) என்பதன் செலவுகளில் ஒன்று.
2025 ஆம் ஆண்டுக்கான நிதிசட்டம், இந்நிலையை மாற்றியுள்ளது. இப்போது, ஒவ்வொரு பிராந்திய நிர்வாகமும்; (conseil régional) தாங்கள் விரும்பினால் கீழ்கண்ட முடிவுகளை எடுக்கலாம்:
சுத்தமான வாகனங்களுக்கு பிராந்திய வரியை அரைபங்கு (50சதவீதம்) குறைக்கலாம், அல்லது, முழுமையாக விலக்கு வழங்கலாம்.
வாகனப் பதிவுச் சான்றிதழ் செலவுகள் என்னென்னவற்றை பொறுத்தது?
ஒரு வாகனத்திற்கான பதிவு சான்றிதழின் (carte grise) கட்டணம் வாகனத்தின் தன்மைகள், உங்கள் வசிப்பிடம் போன்றவற்றைப் பொறுத்தது கணிககப்படும். இதில், பிராந்திய வரி (taxe régionale) முக்கியமான பங்கு வகிக்கிறது.
பிராந்திய வரி என்பது ஒவ்வொரு பிராந்தியங்களின் நிர்வாகத்தினால் நிர்ணயிக்கப்படுவதோடு, இது ஆண்டுதோறும் மாற்றப்படலாம்.
முன்னர்:
அனைத்துப் பிராந்தியங்களிலும், சுத்தமான வாகனங்கள் பிராந்திய வரியிலிருந்து முழுமையான விலக்கு பெற்றிருந்தன.
இப்போது:
ஒவ்வொரு பிராந்தியமும் தனியாக முடிவு எடுக்கலாம்: முழு விலக்கு அல்லது 50 சதவீத விலக்கு என்பது பிராந்திய நிர்வாகத்தின் முடிவு.
உங்கள் வசிப்பிடம் மற்றும் வாகன வகையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கணக்கீட்டு செயலி (simulateur) மூலம், நீங்கள் உங்கள் வாகனப் பதிவின் செலவை கணிக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan