”காஸாவுக்கு முழுமையான ஆதரவை தொடருங்கள்!” - பிரான்சுடன் இணையும் 20 நாடுகள்!!

19 வைகாசி 2025 திங்கள் 19:21 | பார்வைகள் : 557
பிரான்ஸ், ஜேமனி, பிரித்தானியா, கனடா, ஜப்பான், ஒஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் “காஸாவுக்கு தேவையான உதவிகளை” வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மே 19, திங்கட்கிழமை இந்த கோரிக்கையை பிரித்தானியாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கோரியுள்ளது. 20 நாடுகளை இணைத்து, காஸா பகுதி மக்களுக்கு தேவையான அவசரகால உதவிகளை, நலத்திட்டங்களை வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என குறித்த தொண்டு நிறுவனம் கோரியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தடைப்பட்டிருந்த பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அறிவித்துள்ளார். அதில் குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை பொருட்களும், பெரியவர்களுக்கு தேவையான உணவுகளும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதை அடுத்து காஸாவுக்கு உதவிகள் வழங்க மேற்படி நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.