Paristamil Navigation Paristamil advert login

நீதியமைச்சரிற்கு அரசு கண்டனம் - சிறையில் மீண்டும் அனுமதி !

நீதியமைச்சரிற்கு அரசு கண்டனம் -  சிறையில் மீண்டும் அனுமதி !

19 வைகாசி 2025 திங்கள் 19:34 | பார்வைகள் : 579


பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானன் சிறைகளில் அனைத்து பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் (activités ludiques) தடைசெய்யும் உத்தரவை, அரச ஆலோசனை சபை(Conseil d’État) இன்று நிராகரித்தது. இதன் மூலம், சிறைகளில் இப்படியான செயல்பாடுகள் மீண்டும் நடைபெறலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணி என்ன?

2025 பிப்ரவரி 17ஆம் தேதி, ஜெரால்ட் தர்மானன், 'சிறையில் உள்ள விளையாட்டு, கல்வி, மற்றும் பிரஞ்சு மொழிக்கற்றல் தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் தடைசெய்ய உத்தரவிட்டார்.

இது, துலூஸ்-செய்ஸ் (Toulouse-Seysses) சிறையில் கைதிகளுக்கு முக அழகு சிகிச்சை (facial) வழங்கியதாக எழுந்த விவாதத்துக்குப் பின்னர் ஏற்பட்ட நடவடிக்கையாகும்.

உலக சிறை கண்காணிப்பு அமைப்பு (Observatoire international des prisons), பல நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தது.

Conseil d’État என்ன கூறுகிறது?

சிறைத்துறைச் சட்டத்துக்கு (code pénitentiaire) உட்பட்ட பொழுதுபோக்கு செயல்பாடுகளை, ஒரு பொதுவான விதியாக தடைசெய்ய முடியாது என்று தீர்மானித்துள்ளது.

அரசு, சிறையில் வழங்கப்படும் நடவடிக்கைகள்  சிக்கலான சூழ்நிலைகளை நிர்ணயிக்கலாம், ஆனால் 'அவை 'பொழுதுபோக்கு' என்ற காரணத்தால் மட்டுமே தடைசெய்ய முடியாது என்று உயர்மட்ட நிர்வாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தவறான அல்லது அவமதிக்கும் செயற்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையூறாக இருந்தால், அவற்றை தனிப்பட்ட முறையில் தடைசெய்யலாம்.

முக்கியப் புள்ளிகள்

பொழுதுபோக்கு (Ludiques) அவமதிப்பு (irrespectueuses)  என அனைத்துப் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அவமதிப்பானவை அல்ல.

சிறைச் சட்டத்தின் கீழ், கைதிகள் தங்கள் மறுமலர்ச்சிக்கான புதிய திறன்கள், பொழுது போக்கு, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படல் வேண்டும்.

இந்த தீர்ப்பு, சிறைசாலை மறுமலர்ச்சி நோக்கில் மிக முக்கியமான நிலைப்பாட்டாக கருதப்படுகிறது என உலக சிறை அவதானிப்பு மையம் வரவேற்றுளளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்