Paristamil Navigation Paristamil advert login

வாடகை சிற்றுந்து (Taxi) சங்கங்களின் எதிர்ப்பு - எதற்காக?

வாடகை சிற்றுந்து (Taxi) சங்கங்களின் எதிர்ப்பு - எதற்காக?

19 வைகாசி 2025 திங்கள் 17:34 | பார்வைகள் : 2555


இந்த போராட்டம், அரசின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும், தொழிலாளர் பாதுகாப்புக்கும் இடையிலான சிக்கலான சமநிலையை பிரதிபலிக்கிறது.

2024-இல், மருத்துவ போக்குவரத்து செலவுகள் 6.74 பில்லியன் யூரோ-வாக அமைந்துள்ளது.  இதில் 3.07 பில்லியன் யூரோ  (30070 மில்லியன்கள்) ஒப்பந்த வாடகை வாகன சேவைகளுக்கே (Taxi) செலவாகியுள்ளது. இது 2019-இல் இருந்து 45சதவீதம்  அதிகரித்துள்ளது.

இதனால்,

வாடகை வாகன ஓட்டுநர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில்
ஒரு நிர்ணயம் செய்யப்பட்ட நிலைத்த கொடுப்பனவு (forfait de prise en charge) மற்றும்
ஒரு கிலோமீட்டருக்கான விலைப்பட்டியலுக்கு ஏற்ப (tarification kilométrique) ஊதியம் பெறுவார்கள்
என மருத்துவக் காப்பீடான Assurance-maladie சட்டத்தின் ஊடாக இந்த முறையற்ற மாற்றங்களை பிரதமர் பய்ரூ செய்துள்ளார்

இது இவர்களைக் கோபப்படுத்தி உள்ளது.

FNDT (Fédération nationale du taxi) உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள், இந்த திட்டம் நோயாளிகளுக்கும், வாடகை வாகனச் சாரதிகளிற்கும் தீங்கு விளைவிக்கும் எனக் கூறுகின்றனர்.

«நாங்கள் இடையக அமைச்சரவைக் கூட்டத்தை வேண்டுகிறோம். அரசாங்கம் எங்களை புறக்கணிக்க வேண்டும் என யாரும் எண்ணக்கூடாது. ஏழு அமைச்சுகளுக்கிடையே நாங்கள் சிக்கியிருக்கிறோம். ஏப்ரல் மாதத்திலுள்ள போக்குவரத்து அமைச்சின் கூட்டத்தில் எந்த ஒரு அமைச்சரும் வரவில்லை»  எனத் தெரிவிததுள்ளனர்.


தொழில் தரப்பு என்ன கேட்கிறது?

தற்போதைய திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துங்கள்.

மருத்துவ பயணங்களைப் பகிர்ந்து (transport partagé) செய்யும் வழிகளுக்கு தயாராக இருக்கிறோம்

நேரடி பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

என்ற கோரிக்கை கணக்கில் எடுக்கப்படாததால் இன்று பரிசின் பல வீதிகளை முடக்கிப் போராட்டம் நடாத்தி உள்ளனர்.

 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்