அவதானம்.. போக்குவரத்து விதி மீறல்கள்... ஒரு மாதத்தில் 110 கைதுகள்... 1,800 குற்றப்பணம்..!!

19 வைகாசி 2025 திங்கள் 17:21 | பார்வைகள் : 871
இல்-து-பிரான்சின் வடக்கு புறநகர் மாவட்டமான Oise இல் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் அதிகளவான வீதி விபத்துக்களை அடுத்து, அங்கு பலத்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. காவல்துறையினர், ஜொந்தாமினர் என பலத்த வீதி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் குறித்த மாவட்டத்தை ஊடறுக்கும் சாலைகளில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை 1,780 பேருக்கு குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
135 மகிழுந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 90 கி.மீ வேகம் கொண்ட சாலைகளில் சராசரியாக 190 கி.மீ வேகத்தில் அவர்கள் பயணித்துள்ளனர்.
Oise மாவட்டத்தினை ஊடறுக்கும் நெடுஞ்சாலைகளில் இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 17 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதை அடுத்தே இந்த போக்குவரத்து கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ளது.