Paristamil Navigation Paristamil advert login

Les Républicains கட்சியின் புதிய தலைவரின் இரட்டைவேடம்!!

Les Républicains  கட்சியின் புதிய தலைவரின் இரட்டைவேடம்!!

19 வைகாசி 2025 திங்கள் 16:21 | பார்வைகள் : 426


 

ஞாயிறு அன்று Les Républicains கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புரூனோ ரத்தெயோ (Bruno Retailleau), தனது முதல் நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தினை(conseil stratégique) மே 20, செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு கட்சி தலைமையகத்தில் கூட்டவுள்ளார்.

கட்சி தலைவராக காலை நேரத்தைச் செலவிட்ட பிறகு, 2024 செப்டம்பர் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றி வரும் ரத்தெயோ, மதியம் முதல் மீண்டும் உள்துறை அமைச்சகத்திற்குத் திரும்பவுள்ளார். அங்கு, 2010-இல் Villiers-sur-Marne- இல் கொள்ளையொன்றைத் தடுக்க முயன்று , உயிரிழந்த காவல்துறை அதிகாரி Aurélie Fouquet க்கு செய்யப்படும் அஞ்சலிச நிகழ்வில் பங்கேற்பார்.

இந்த நிலையில், ரத்தெயோ இரட்டை 'அடையாளங்களை' தொடர்ந்து பராமரிக்கவுள்ளார்.

புரூனோ ரத்தெயோ, கட்சித் தலைமைக்கான தேர்தலில் Laurent Wauquiez இனை எதிர்த்து 74.31சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார் (வோகியெஸ் – 25.69 சதவீதம்).

இந்த வெற்றி, 2027-இல் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்புகளை அவருக்கு திறந்துள்ளது. அவர் தன்னுடைய எதிர்கால குறிக்கோளாக, 'நாம் வெற்றி பெற நான் முதன்மையான போட்டியாளனாக இருப்பேன். வெற்றியின் முதன்மை நாயகனான நான் இருப்பேன்' என்றும் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்