CAF 6.3 பில்லியன் யூரோக்கள் தவறான கொடுப்பனவுகள்?

19 வைகாசி 2025 திங்கள் 15:02 | பார்வைகள் : 3369
கணக்குகள் நீதிமன்றம் CAF கணக்குகளை இரண்டாவது முறையாகவும் சரிபார்க்க மறுத்துள்ளது. காரணம் 6.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள தவறான கொடுப்பனவுகள் ஆகும்.மேலும், இந்தப் பணம் மீண்டும் திரும்பப்பெற வாய்ப்பில்லை என்பதாகும்.
2023-இல் ஆரம்பித்த மேம்பாட்டு திட்டமும், 2024 இறுதியில் 75% செயல்படுத்தப்பட்டாலும், கணிசமான மாற்றமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மோசடி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, குறிப்பாக activité primeமில் நான்கில் ஒன்று தவறான கோப்பாக இருக்கிறது.
CAF மட்டும் அல்ல, சமூக பாதுகாப்பின் பல கிளைகளிலும் தவறுகள் காணப்படுகின்றன. சுகாதார காப்பீட்டில் 3.3 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் தவறுகள், 2 பில்லியன் யூரோக்கள் மோசடிகள் உள்ளன.
ஓய்வூதியங்களிலும் 10-ல் ஒன்று தவறானது. இந்த நிலமையை சரிசெய்ய 'மூலத்திலேயே நிவாரணம்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நிலவும் நிலைமை, கண்காணிப்பின்றி வழங்கப்படும் கொடுப்பனவுகள், நிதிச் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.
CAF-இல் மட்டும், ஆண்டுக்கு 104 பில்லியன் யூரோக்கள் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இது சிறிய விஷயம் அல்ல. ஆனாலும், 8% கொடுப்பனவுகள் தவறானவையாகும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1