Paristamil Navigation Paristamil advert login

ராக்கெட் தோல்வியை ஆராய குழு அமைப்பு

ராக்கெட் தோல்வியை ஆராய குழு அமைப்பு

19 வைகாசி 2025 திங்கள் 08:02 | பார்வைகள் : 202


ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது, என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

சென்னை, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: நேற்று காலை திட்டமிட்டபடி, 5:59 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதில், நான்கு நிலைகள் உள்ளன. நான்கும் வேலை செய்தால் தான், அதை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்த முடியும். முதல் இரண்டு நிலைகள் சிறப்பாக செயல்பட்டன. மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால், ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்த முடியவில்லை. நான்காம் நிலை சிறப்பாக செயல்பட்டது.

எதனால் இப்பிரச்னை ஏற்பட்டது என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவினர் தோல்வி குறித்து ஆய்வு செய்கின்றனர். தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டில், அது போன்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.

ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனினும், ஒவ்வொரு மாதமும், ஒரு ராக்கெட் வீதம், இன்னும், 13 ராக்கெட்டுகளை தொடர்ச்சியாக விண்ணில் செலுத்த உள்ளோம். மக்கள் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக வாழ, அனைத்து விதமான பணிகளையும், இந்திய விண்வெளித்துறை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு தேவையானதை, எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை விண்வெளி துறையில் சிறப்பாக செய்து வருகிறோம். இவ்வாறு நாராயணன் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்