Paristamil Navigation Paristamil advert login

ரிமா ஹசனின் யூத எதிரப்புவாதம்!

ரிமா ஹசனின் யூத எதிரப்புவாதம்!

18 வைகாசி 2025 ஞாயிறு 17:48 | பார்வைகள் : 467


இந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஐரோப்பிய பாடல் போட்டி (Eurovisison ) நிகழ்ச்சியின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன், இஸ்ரேலின் பங்கேற்பு குறித்து  மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவு செய்துள்ளார்.

இந்த ஐரோப்பிய பாடல் போட்டி நிகழ்ச்சியின் போது 7 அக்டோபர் பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய யுவல் ராபயேல் (Yuval Raphael) இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றார்.

இதைத் தொடர்ந்து, ரிமா ஹசன் X தளத்தில் 'MONEY, MONEY, MONEY' (பணம், பணம், பணம்) என்கிற வார்த்தையுடன் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளியில், இஸ்ரேல் Eurovision போட்டிக்கு நிதியளிக்கிறது என கூறியுள்ளார்.

இது இஸ்ரேலுக்கு எதிர்ப்ர்புக் கோட்பாடுகள் மற்றும் யூத விரோத கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளதாகப்  பலர் விமர்சித்துள்ளனர்.

பல இணைய பயனர்கள் இந்த பதிவைக் கண்டிக்கின்றனர். சிலர் இது அதிகரிக்கப்படும் யூத விரோத தாக்குதல்களிற்கு ஒப்பானது என்றும், பணத்தை யூதர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற பழமையான தவறான நம்பிக்கை போன்றே இவரின் கருத்துகள் மிக மோசமாகத் தவறானது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அப்படியான மோசமான கருத்துக்களைக் கக்கிக் கொண்டுள்ளார்.

இதே ரிமா ஹசன், ஜோன்-லுக் மெலோன்சோனுடன் இணைந்து, பேரணிகளில் யூத எதிர்ப்பு வாதத்தைப் பரப்பி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்