குவாதிலூப் - துப்பாக்கிச் சூட்டுப் படுகொலை!
18 வைகாசி 2025 ஞாயிறு 16:48 | பார்வைகள் : 6061
குவாதிலூப்பின் Le Gosier நகரில் உள்ள ஒரு அருந்தகத்தின் வெளியே, சனிக்கிழமை காலை ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் Le Gosier பகுதியை உலுக்கியது. சனிக்கிழமை காலை, குவாடெலூப்பில் உள்ள ஒரு அருந்தகத்தின் இருந்து வெளியே வந்த இருவரும் தாக்கப்பட்டனர்
காவல் துறையிலிருந்து கிடைத்த தகவலின்படி:
இந்த சம்பவம் காலை 6:15 மணியளவில் நடந்தது. அதன் சில நிமிடங்களில், அந்த இருவரும் தாங்களே வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், 6:50க்கு ஒருவர் காயங்களால் மரணமடைந்தார்.
சம்பவத்தின் முழு விபரங்களும் இதுவரை தெரியவில்லை. Pointe-à-Pitre மத்திய காவல்நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.
2024ல் 33 கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், குவாதிலூப், கயானாவுக்குப் பின், பிரான்ஸில் அதிக கொலை விகிதம் கொண்ட இரண்டாவது பிராந்தியமாக திகழ்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan