கயானா - உயர் பாதுகாப்பு சிறைச்சாலை!

18 வைகாசி 2025 ஞாயிறு 15:48 | பார்வைகள் : 7408
நீதி அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் அறிவிப்பின்படி, பிரெஞ்சு கயானாவில் (GUYANE) 2028க்குள் ஒரு புதிய உயர் பாதுகாப்பு சிறை கட்டப்பட உள்ளது. இது Cayenne இலிருந்து 300 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள Saint-Laurent-du-Maroni பகுதியில் அமைக்கப்படும்.
இந்த சிறையில் 500 கைதிகளுக்கு இடமிருக்கும்.
இதில் அதி விசேட பாதுகாப்புப் பிரிவொன்றில் போதைப்பொருள் கடத்தல் சிறையில் 60 பேரும், தீவிர இஸ்லாமிய மதவாதப் பயங்கரவாதிகள் மற்றும் S பட்டியலில் உள்ளவர்கள 15 பேரும் அடங்குவார்கள்.

சிறைச்சாலையில்:
விசேட பிரிவுகள் உருவாக்கப்படும்
மிகக் கண்டிப்பான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும்
கைதிகளின் நடமாட்டம் மற்றும் விருந்தினர்களின் வருகை மிக அவதானமாகக் கண்காணிக்கப்படும்
கைதிகள் வெளித்தொடர்புகள் எதனையும் வைத்திருக்க முடியாது
விசாரணைகள், கண்காணிப்புகள் தொடர்ந்து நடைபெறும்
தர்மனின் கூற்றுப்படி, Vendin-le-Vieil மற்றும் Condé-sur-Sarthe சிறைகளுக்குப் பின்னர் இது, பிரான்ஸின் மூன்றாவது உயர் பாதுகாப்பு சிறையாகும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1