இடி மின்னலுடன் கூடிய பெருமழை - 34 பிராந்தியங்கள் எச்சரிக்கையில்!!

18 வைகாசி 2025 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 504
நாளை திங்கட்கிழமை 19ம் திகதி பெரும் இனுயுடன் கூடிய பெருமழை மற்றும் பலத்த காற்றிற்கான எச்சரிக்கையை 34 மாவட்டங்களிற்கு பிரான்சின் தேசிய வானிவை ஆய்வு வழங்கி உள்ளது.
குறிப்பாக, பின்வரும் மாவட்டங்கள் இடியுடன் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பெருமழையால் பாதிக்கப்படலாம் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
l'Allier, l'Ariège, l'Aude, l'Aveyron, le Cantal, la Charente, le Cher, la Corrèze, la Côte-d'Or, la Creuse, la Dordogne, le Doubs, la Haute-Garonne, le Gers, la Gironde, l'Hérault, l'Indre, le Jura, les Landes, la Loire, la Haute-Loire, le Lot, le Lot-et-Garonne, la Nièvre, le Puy-de-Dôme, les Pyrénées-Atlantiques, les Hautes-Pyrénées, le Rhône, la Saône-et-Loire, le Tarn, le Tarn-et-Garonne, la Vienne, la Haute-Vienne, l'Yonne
திங்கள் பிற்பகலில் தென் மேற்குப் பகுதியில் கடுமையான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய காலநிலை உருவாகும். இது பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி (கல் போன்ற பனிக்கட்டிகளுடன்) மழையுடன் வரும் எனவும் பின்னர் இது கிழக்குத் திசையை நோக்கி நகரும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை எதிர்வு கூறப்பட்ட இந்த எச்சரிக்கையை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.