அல்ஜீரியாவுடன் முறுகல் நிலை.. விசா கோருகிறது பிரான்ஸ்!!

17 வைகாசி 2025 சனி 18:53 | பார்வைகள் : 729
பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே அரசியல் முறுகல் நிலை தொடரும் நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருவோருக்கு விசா நடைமுறையை செயற்படுத்தியுள்ளது பிரான்ஸ்.
'குறுகிய நாட்கள்' பயணம் மேற்கொள்ள உள்ள அனைவரும் பிரான்சுக்கான விசாவை பெற்றுக்கொள்ள வேண்டும் என அல்ஜீரியாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 16, நேற்று வெள்ளிக்கிழமை முதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு விசா நடைமுறை நீக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் தற்போது 12 ஆண்டுகளின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமையால் அந்த ஒப்பந்தம் மீறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.