நாகை - காங்கேசன்துறை கப்பலில் மேலதிக பயணப்பொதி எடுத்த செல்ல அனுமதி
17 வைகாசி 2025 சனி 17:50 | பார்வைகள் : 9050
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது.
நேற்று 100வது நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு புறப்பட்ட கப்பலில் 85 பயணிகள் பயணம் செய்தனர்.
இரு நாட்டு பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். இலங்கைக்கு கப்பல் புறப்படுவதற்கு முன்பு துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவன குழுமத்தினருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொடியசைத்து வைத்து சிவகங்கை கப்பலை வழி அனுப்பி வைத்தனர்.
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே பயணிகள் 10 கிலோ வரை பயணப்பொதியை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போது 22 கிலோ வரை மேலதிகமாக பயணப்பொதியை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினர் கூறினர்.
பயணிகளுக்கு பாதுகாப்பு நிறைவாக உள்ள வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை இந்த பயணம் அள்ளித்தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan