"மக்ரோனை பிரெஞ்சு மக்கள் கூட நேசிக்கவில்லை": ருமானியா ஜனாதிபதி வேட்பாளர் கண்டனம்!

17 வைகாசி 2025 சனி 16:11 | பார்வைகள் : 577
ருமானியா ஜனாதிபதி தேர்தலில் தேசபக்த வேட்பாளரான ஜோர்ஜ் சிமியன் (George Simion), தேர்தல் செயல்பாட்டில் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலையிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
"நீங்கள் பேரரசர் அல்ல, பிரஞ்சு மக்களால் விரும்பப்படுவதும் இல்லை" என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை விமர்சித்த அவர், ருமானியா தேர்தலில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
"சர்வாதிகாரப் போக்குகளை" கண்டித்து, பிரான்ஸை ஈரானுடன் ஒப்பிட்டுள்ளார். மேலும் "என் எதிராளிக்கு இம்மானுவேல் மக்ரோனின் ஆதரவு இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை நான் ருமேனியாவின் அடுத்த ஜனாதிபதியாக இருப்பேன்" என்று ஜார்ஜ் சிமியோன் பெருமையாகக் கூறியுள்ளார். "
38 வயதான AUR கட்சித் தலைவர் ஜோர்ஜ் சிமியன், முதல் சுற்றில் 41 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில், புசாரெஸ்ட் (Bucarest) மேயர் மற்றும் ஐரோப்பா சார்ந்த வேட்பாளர் நிகுசோர் டானுடன் (Nicusor Dan) கடும் போட்டி நிலவுகிறது.