Boulevard de Clichy : தீப்பிடித்து எரிந்த பேருந்து!!

17 வைகாசி 2025 சனி 14:37 | பார்வைகள் : 6629
பரிஸ் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard de Clichy பகுதியில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
மே 17, இன்று சனிக்கிழமை காலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Jules-Ferry லீசேக்கு எதிரே பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை அணைத்தனர்.
குறித்த பேருந்து RATP நிறுவனத்துக்குச் சொந்தமான மின்சாரத்தில் இயங்கும் பேருந்து எனவும், முதலாம் இலக்க சேவையில் இயக்கப்படும் பேருந்து எனவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1