WERENOI - WERENOI - மேலும் பல விரிவான தகவல்கள்!
17 வைகாசி 2025 சனி 13:48 | பார்வைகள் : 4642
பிரெஞ்சு ராப் உலகில் உருவெடுத்திருந்த புதிய அலை WERENOI, தனது 31வது வயதில் கடந்த இரவு இதய செயலிழப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவல் அவரது தயாரிப்பாளரின் சோகச் செய்தியுடன் சமூக வலைதளமான X-இல் வெளியானது.
'அமைதியாக ஓய்வெடு என் சகோதரா,' என அவரது தயாரிப்பாளர் தனது உருக்கமான பதிவில் எழுதியுள்ளார்.
Poitou-Charentes மண்டலத்தில் உள்ள ஒரு களியாட்டத் தளத்தில் கச்சேரிக்கு வரவிருந்த WERENOI, முதல் இரவே சுகவீனம் அடைந்து La Pitié-Salpêtrière மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். ஆனாலும் உடல் நிலை மோசமான நிலையில், சாவடைந்துள்ளார்.
இவரின் உண்மைப் பெயர் ஜெரமி பானா ஓவோனா (Jérémy Bana Owona), சென்- சன் துனி (93) பகுதியைச் சேர்ந்த WERENOI, 2021-இல் 'Guadalajara"' என்ற ஆல்பத்துடன் புகழ் பெற்றார். மிகுந்த பரபரப்பும் மர்மமும் நிறைந்த அவருடைய பாணி, பிரெஞ்சு ராப் ரசிகர்களிடம் தீவிர ஈர்ப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் அவர் வெளியிட்ட 'Pyramide 2' ஆல்பம், பிரான்சின் பிரபலமான ' la cérémonie des Flammes' விருதுகளில் பல பிரிவுகளில் தேர்வாகியிருந்தது.
மேலும், 'Diamant noir' என்ற புதிய ஆல்பத்திற்காக தயார் செய்து கொண்டிருந்த அவர், இன்று டyon இல் உள்ள 'Azar Club இல் கச்சேரி நடத்தவிருந்தார்.
இவரின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக ஒளிர இருந்த நிலையில் இளவயதில் இவரது சாவு, பிரான்சின் இசைத்துறையை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan