2025யில் உலகின் பணக்கார விளையாட்டு வீரர் ரொனால்டோதான்! அவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

17 வைகாசி 2025 சனி 12:42 | பார்வைகள் : 118
போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக கால்பந்து ஜாம்பவான்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும் உள்ளனர்.
ஆனால், ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, கிறிஸ்டியனோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கடந்த ஆண்டு 275 மில்லியன் டொலர்கள் சம்பாதித்தார்.
இது இந்திய மதிப்பில் ரூ.2295 கோடி என்பது வியக்கத்தக்க விடயம் ஆகும். ஏனெனில், இவருக்கு அடுத்த இடங்களில் உள்ளவர்களின் வருமானம் மிகக் குறைவு.
ரொனால்டோ ஜுவெண்டஸில் இருந்து அல் நஸருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லின் டொலரைத் தாண்டியது.
இதன்மூலம் அவர் வரலாற்றில் ஆண்டுக்கு அதிகம் சம்பாதிக்கும் மூன்றாவது நபராக (விளையாட்டு வீரர்களில்) மாறினார் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது.
கால்பந்து விளையாட்டு மட்டுமன்றி, வணிக ரீதியாகவும் ரொனால்டோ வருமானம் ஈட்டி வருகிறார். அதாவது, தனது விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சொந்த பிராண்டின் (CR7) கீழ் ஹொட்டல்கள், வாசனை திரவியங்கள், ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாக அவர் பணம் பெற்று வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் இருக்கிறார். இவரது வருமானம் 133.8 மில்லியன் டொலர் ஆகும்.