Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் சிறுமி உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க முடியாதென அறிவிப்பு

கொழும்பில் சிறுமி உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க முடியாதென அறிவிப்பு

17 வைகாசி 2025 சனி 11:42 | பார்வைகள் : 197


கொழும்பு - கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதுதொடர்பாக குறித்த தனியார் வகுப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன.

எந்தவொரு நபரும் அந்த வகுப்பு நிலையத்தின் உரிமையாளருடன் தொடர்புபடுத்தப்படும் சம்பவம் குறித்து நேரடியான சாட்சிகளை வழங்கவில்லை.

எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் கைவிடப்படாமல் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்