இஸ்ரேலிய பிரதமரைச் சந்திக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

17 வைகாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 2395
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை வரும் நாட்களில் சந்திக்க உள்ளார்.
"ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாடு" அல்பேனியாவில் நேற்று மே 16, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்தே இதனை அறிவித்தார். காஸாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அங்கு போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர பல்வேறு ஐரோப்பிய தலைவர்களை அழைத்துக்கொண்டு வரும் நாட்களில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளார்.
"ஜனாதிபதி மக்ரோன் பயங்கரவாதத்துக்கு துணை போகிறார்!' என அண்மையில் நெத்தன்யாஹூ குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இரு நாடுகளின் முறுகல் நிலையை தவிர்ப்பதற்கும் இந்த சந்திப்பு அவசியமாகிறது என அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1