ரஸ்யாவை நோக்கிய புதிய தடைகள் - எச்சரிக்கும் மக்ரோன்!

17 வைகாசி 2025 சனி 00:09 | பார்வைகள் : 309
போர்நிறுத்தத்தை மறுக்கும் மொஸ்கோவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் உருவாகின்றன.
ஈரானில் இருந்து உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்,
«ரஸ்யா உக்ரைனில் போர்நிறுத்தத்தை நிராகரிப்பது தொடர்ந்தால், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளைத் தயாரித்து வருகிறார்கள்» என எச்சரித்து உறுதிபட தெரிவித்துள்ளார்.
«தற்போதைய நிலவரத்தில், ஒரே தெளிவான முன்மொழிவு அதாவது எந்தவொரு நிபந்தனையுமின்றி ஒரு தற்காலிக போர்நிறுத்தம் மட்டும் தான் உங்கள் மேசையில் உள்ளது» என ரஸ்யாவிற்கு வேறு தெரிவு இல்லை என்பதைக் கண்டிப்புடன் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து, இஸ்தான்புலில் நடைபெற்ற பலனளிக்காத உக்ரைன்-ரஸ்யா பேச்சுவார்த்தைகளுக்குப் பின் வெளியானது.
«அமெரிக்கா உள்ளிட்ட நம்முடைய கூட்டாளிகளுடன் நாங்கள் ஒருங்கிணைந்து புதிய பொருளாதாரத் தடைகளை உருவாக்கி வருகிறோம், மொஸ்கோ சமாதான முயற்சிக்கு நேர்மையான பதில் அளிக்காவிட்டால், இந்தத் தடை நடவடிக்கைகள் அமலுக்கு வரும்» என்றும் மக்ரோன் எச்சரிக்கை விடுத்தார்.
ஐரோப்பா-அமெரிக்க ஒற்றுமை மீண்டும் வலுப்பெறும்
இந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள், உலக அரசியல் மையமாக மாறிய உக்ரைன் சிக்கலில் ஒரு வலுவான, ஒற்றுமையான பதிலை உருவாக்க முயற்சிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டும், ரஸ்யாவின் போர்வாத போக்குக்கு எதிராக ஒருங்கிணைந்து பெரும் அழுத்தத்தை பிரயோகிக்கத் திட்டமிட்டுள்ளன.